வரிசையில் நிற்கும் அனைவரும் வெளியேறும் வரை எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்: எரிசக்தி அமைச்சர்
Prathees
2 years ago
சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு அருகாமையில் வரிசையில் காத்திருந்த மக்கள் வெளியேறியதன் பின்னர் மீண்டும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனவே சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் மக்கள் தங்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.
எதிர்காலத்தில் எரிபொருளைப் பெறுவதற்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் கட்டாயம் எனத் தெரிவித்த அவர், வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் பிரகாரம் குறித்த திகதியில் மாத்திரமே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு வாகனத்திற்கும் வாரத்திற்கு போதுமான எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.