ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு: கட்சி வேறுபாடின்றி ரணிலுக்கு வாக்களிக்க உறுதி

Prathees
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு:  கட்சி வேறுபாடின்றி ரணிலுக்கு வாக்களிக்க உறுதி

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பேர் ஏற்கனவே இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளவர்கள், அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டின் படியே செயற்படுவார்கள்.

அதற்கமைவாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!