காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Mayoorikka
2 years ago
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

காலி முகத்திடல் போராட்டத்தின் போராட்டக்காரர்கள் இன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினர்.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க அவர்களது அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை என செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
  
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரை இன்று சந்தித்தாகவும் தெரிவித்தனர்.

காலிமுகத்திடல் போராட்டப் பிரசாரத்தின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை எந்தவொரு அரசாங்கமும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாசவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், காலிமுகத்திடல் போராட்ட பிரச்சார பிரதிநிதிகள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.
 
கடந்த காலங்களில் காலி முகத்திடல் போராட்டத்தின் பிரச்சாரப் பிரதிநிதிகளை தானோ அல்லது தனது கட்சியோ அல்லது கூட்டணியோ கைவிடவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, எதிர்காலத்திலும் அவ்வாறு செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தார்.