எரிபொருள் விநியோகம் செய்வதில் தாமதம் – இலங்கை போக்குவரத்து சபை
Prabha Praneetha
2 years ago
இலங்கை போக்குவரத்து சபையின் பல டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் மேலும் தாமதமாகினால் குறைவான பேருந்துகளே சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இன்று குறைக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டால் நாளை மேலதிக பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிடப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.