அதிவிசேட வர்த்தமானியில் அவசரகால சட்டங்கள்
Kanimoli
2 years ago
இலங்கை பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால சட்ட விதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சட்டவிதிகள் நேற்று (18) வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
அவசரகால சட்டங்கள் பொது அத்தியாவசிய சேவைகள் நுழைவு உரிமை தேடுதல் மற்றும் கைது செய்யும் உரிமை என்று ஏழு பகுதிகள் இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்படி, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன.