காகித பயன்பாட்டை நிறுத்தும் இலங்கை சுங்கம்!

Mayoorikka
2 years ago
காகித பயன்பாட்டை நிறுத்தும் இலங்கை சுங்கம்!

இலங்கையில் அலுவலகப் பணிகளில் காகிதத்தைப் பயன்படுத்தாத முதல் துறையாக சுங்கத் திணைக்களம் மாறியுள்ளது.

இது நாளை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் வருடாந்தம் காகிதம் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு செலவிடப்படும் 22 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை தமது திணைக்களம் சேமிக்க முடியும் என சுங்க பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்பிரிய தெரிவித்தார்.
 
புதிய முறைமையின் பிரகாரம், அலுவலகப் பணிகள் தானியங்கி கணனி அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுவதுடன், அந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுவது விசேட அம்சமாகும்.