இலத்திரனியல் பயணச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Mayoorikka
2 years ago
இலத்திரனியல் பயணச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

புகையிரத நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகளின் கையிருப்பு குறைந்து வருவதால் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை ரயில்வே எவ்வித அக்கறையும் காட்டவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
 
அரச அச்சகத் திணைக்களத்தில் பயணச்சீட்டு அச்சடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அச்சிடும் உபகரணங்கள் இலங்கை ரயில்வே தலைமையகத்தில் உள்ள அச்சிடும் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் போதிய பணியாளர்களை பணிக்கு நியமிக்காததால் செயற்பாடுகள் மந்தமடைந்துள்ளதாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால், கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, வெயங்கொடை, ராகம புகையிரத நிலையங்கள் மற்றும் பல உப நிலையங்களில் பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!