ஜனாதிபதி ஆவதற்கு வாக்குகளை பெற எம்.பி.க்களுக்கு 10 கோடி வழங்கப்பட்டது: ராஜித
Prathees
2 years ago
பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி வழங்கி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவில் உள்ள முட்டாள்களை நன்றாக அரைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து சஜித் பிரேமதாச நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் அவர், சஜித் பிரேமதாச இன்னும் முதிர்ந்த அரசியல்வாதியாகவில்லை என்றும் கூறுகிறார்.