சிங்கள மக்களை நோக்கி திரும்பிய அவசர காலச் சட்டம் தென்னிலங்கையில் இரத்த ஆறு ஓடும்
Kanimoli
2 years ago
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட அவசர காலச் சட்டம் தற்போது சிங்கள மக்களை நோக்கி திரும்பியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது.
ஆர்ப்பாட்டக்கார்களை கைது செய்யும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறினார்.
இதனால் தென்னிலங்கையில் இரத்த ஆறு ஓடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் பகிரங்கமாக எச்சரித்தார்.
நேற்று நாடாளுமன்றித்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வரறு எச்சரித்திருந்தார்.