இரத்மலானையிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் உயிரிழப்பு
Kanimoli
2 years ago
இன்று அதிகாலை இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்மலானை – சில்வா மாவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்தவராவார்.
துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டபோது உயிரிழந்த இளைஞரின் மனைவியும் வீட்டிலிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லையென்றும் குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.