சீரான முறையில் எரிவாயு விநியோகம்
Prabha Praneetha
2 years ago
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிவாயு விநியோக நடவடிக்கைகளையும் சீராக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது நாட்டில் சில பகுதிகளில் எரிவாயு விநியோகம் சீராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் சிறப்பான முறையில் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக நேற்று எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.