சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஜனாதிபதிக்கும் கட்சிகளுக்கும் இடையிலான முதலாவது கலந்துரையாடல் இன்று
Prathees
2 years ago

சர்வகட்சி அரசாங்கத்திற்கான முதலாவது கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
மாலை 05.00 மணிக்கு இடம்பெறும் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு எழுத்து மூலம் முன்னர் அறிவித்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.
நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுக்களுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கலந்துரையாடலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



