விமானத்தில் பயணிகளுக்கான உணவு தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தகவல்

Kanimoli
2 years ago
விமானத்தில் பயணிகளுக்கான உணவு தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முதல்நிலை வணிக ஆசன (Business Class) வகுப்பில் உணவு கிடைக்காது என்ற கூற்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. 

சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு பயணியின் காணொளி தொடர்பிலேயே ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தமது மறுப்பை வெளியிட்டுள்ளது.

வணிக வகுப்பு பயணிகளுக்கு நான்கு உணவு தேர்வுகள் வழங்கப்பட்டன; கோழி, கடல் உணவு, மாட்டிறைச்சி மற்றும் சைவம் என்பனவே அந்த தெரிவுகளாகும்.

இந்த நிலையில் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள், தங்கள் பயணிகளுக்கு உணவு விருப்பங்களை தரும் அதே முறையிலேயே தாமும், உணவு விருப்பங்களில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பயணிகளுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுகள்
உணவுகள் வீணானதைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு எப்போதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுகள் இருப்பதை தமது விமான நிறுவனம் உறுதி செய்கிறது.

இதேவேளை காணொளி காட்சியில், இரண்டு பயணிகளால் கோரப்பட்ட தேர்வு கையிருப்பில் இல்லை, எனவே அவர்களுக்கு மாற்று விருப்பங்கள் வழங்கப்பட்டன.

எனினும் காணொளியை பதிவிட்டவர், வேண்டுமென்றே உணவு கிடைக்காது என்று விளக்கி தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!