நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்
Mayoorikka
2 years ago
பல தனியார் பஸ் சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
தமது பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை எனக் கூறி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, போதியளவு எரிபொருள் விநியோகம் செய்யப்படாமையின் பின்னணியில் கட்டணத்தை திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் பல வழித்தடங்களில் இயங்கும் பஸ்கள் சேவையில் இருந்து விலக்கப்படவுள்ளதாக இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
பஸ் சேவையில் இருந்து விலகும் தீர்மானத்திற்கு போக்குவரத்து அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.