இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
#SriLanka
#Ranil wickremesinghe
Prasu
2 years ago
இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து நாங்கள் தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதிக வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம் அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.