பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளுக்கான ஆதரவுப் போராட்டம் மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்று வருகின்றது
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவுப் போராட்டம் காலை 8.00 மணிமுதல் மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்று வருகின்றது.
கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அதிலும் தமிழ் பேசும் மக்களின் மீது கூடுதலாக திணிக்கப்படும் இவ் சட்டத்துக்கு எதிராக குறித்த போராட்டாம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடு தழுவி குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதன்போது பயங்கரவாத சட்டத்தினால் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் உறுவுகளுக்கு மிக விரைவில் விடுதலை கிடைக்வேண்டும் என்றும் இந்த பயங்கரவாத சட்டம் இலங்கையில் முற்றாக நீக்கப்பட வேண்டும் என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சானக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் இலங்கை தமிழர் கட்சி வாலிபர் முன்னணி மதகுருமார்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மக்கள் என பலரை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.