19 ஆம் திகதி விடுமுறை: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
Mayoorikka
2 years ago
செப்டம்பர் 19 ஆம் திகதி (திங்கட்கிழமை) அரசாங்க விடுமுறையாக இருந்தாலும், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு அன்றைய தினம் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 19 அன்று அரசாங்கத்தால் சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாடசாலைகளுக்கும் குறித்த விடுமுறையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அன்றைய தினத்தை விடுமுறை தினமாக கருதி செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.