காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் தடம்புரண்டது! கரையோர ரயில் சேவைகள் தாமதமடையலாம்
Mayoorikka
2 years ago
காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான அதிவிரைவு குளிரூட்டப்பட்ட ரயில் நேற்றிரவு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது.
இதனால் கொழும்பில் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில் பாதை பாரியளவில் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயிலை மீண்டும் தண்டவாளத்திற்குள் உள்வாங்குவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதால், கரையோர ரயில் சேவைகள் தாமதமடையலாம் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை குளிரூட்டப்பட்ட ரயில் சேவையில் மற்றொரு ரயில் இணைக்கப்பட்டு காங்கேசன்துறையை நோக்கி ரயில் புறப்பட்டுள்ளது.