கண்ணுக்கு தெரியாத கரம் ஒன்று அரசாங்கத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் கட்டுப்படுத்துகிறது - ஜி.எல் பீரிஸ்

Kanimoli
2 years ago
கண்ணுக்கு தெரியாத கரம் ஒன்று அரசாங்கத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் கட்டுப்படுத்துகிறது - ஜி.எல் பீரிஸ்

கண்ணுக்கு தெரியாத கரம் ஒன்று அரசாங்கத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் கட்டுப்படுத்துவதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலடியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எந்த நேரத்திலும் கம்பளத்தை இழுக்க முடியும் என பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஒரு கண்ணுக்கு தெரியாத கை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதீத அதிகாரங்கள் உள்ளன என்று ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இயங்குகிறது.

எனினும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியை சிறு குழுவொன்று கைப்பற்றியுள்ளதால் கட்சி கூட்டங்களில் தாம் கலந்து கொள்வதில்லை என்று ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!