மத தலங்களுக்கான மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது - ஓமல்பே சோபித தேரர்
விகாரைகள், மத தலங்களுக்கான மின்கட்டணம் நூற்றுக்கு 555 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் துன்புறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“மின் கட்டணத்தை செலுத்த வழியில்லை. செலுத்த போவதுமில்லை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளின் நிர்வாகிகளும் ஒருமித்து செயற்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடியினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மேலும் துன்புறுத்தும் வகையில் மின் மற்றும் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கும்,போசிப்பதற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் பௌத்த மதத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.