நாடளாவிய ரீதியில் மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம்

Mayoorikka
2 years ago
நாடளாவிய ரீதியில் மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் அடுத்த சில வார இறுதிகளில்  மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 17 மற்றும் 24 மற்றும் ஒக்டோபர் 1 மற்றும் 8 ஆகிய 04 வார இறுதி நாட்களில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த தடுப்பூசி திட்டத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை தொற்றாநோய் பிரிவின் தலைமை தொற்றாநோய் நிபுணரை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!