அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பான வதந்திகள் குறித்து நிதி அமைச்சர் வெளியிட்ட கருத்து
Prathees
2 years ago

அரச ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் சம்பளத்தில் பாதி வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அறிவித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி ஒன்று பரவியது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறான வதந்திகள் உருவாக்கப்படுவது வழமை என குறிப்பிட்டுள்ளார்.



