பாணின் விலை மீண்டும் உயர்வடையும் சாத்தியம்!
Mayoorikka
2 years ago

சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்பட்டமையை தொடர்ந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கான விலையை 13 ரூபாவால் அதிகரித்துள்ளன.
இதனால் வெதுப்பக உற்பத்தி பொருட்களில் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்தார்.
இதற்கமைய பாண் ஒரு இறாத்தலின் விலை மேலும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



