புதிய வரிகளால் IT துறையில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அறிகுறிகள்

Prathees
2 years ago
புதிய வரிகளால் IT துறையில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அறிகுறிகள்

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அண்மைக்காலமாக விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக, அத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக இலங்கை கணினிக் கழகம் தெரிவித்துள்ளது.

தகவல் தொழிநுட்பத் துறைக்கு 30 வீத வரி விதிப்பு திடீரென அமுல்படுத்தப்படுவதன் மூலம் அத்துறையில் பணியாற்றும் மக்களின் வாழ்க்கை முறையே மாற்றமடையும் என அதன் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி இலக்குகளை அடைய முடியாது என இலங்கை கணினிக் கழகத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தகவல் தொழிநுட்பத் துறை கடந்த பருவத்தில் ஒரு விழிப்புணர்வைக் காட்டியது. இணையத் தொழில்முனைவில் இளைஞர்கள் உட்பட பலர் காட்டும் வலுவான ஆர்வமே இதற்குக் காரணம். அவர்களில் கணிசமானவர்கள் ஏற்கனவே  வருமானம் ஈட்டி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!