22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்: இன்றும் நாளையும் விவாதம்
22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளது. அதன் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
சில அரசியல் கட்சிகளுக்கிடையில் கூட கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் பின்னணியில் 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று விவாதிக்கப்படுகிறது. இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று வரைவில் கூறப்பட்டதே இதற்கு நெருங்கிய காரணம்.
22வது அரசியலமைப்பு திருத்த வரைபு மீதான வாக்கெடுப்பு தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நெத் நியூஸுக்கு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அரசாங்கம் கொண்டு வந்த பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் தரப்பினரால் முடியாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.