உயிர் கொல்லி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது
Kanimoli
2 years ago
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் உயிர் கொல்லி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையின் போது இன்றைய தினம் (19-10-2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பெண்ணை கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குடும்ப தலைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.