சிகரெட் பொதியில் மறைத்து கஞ்சாவை எடுத்துச் சென்ற விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் கைது
Kanimoli
2 years ago
நுவரெலியா நீதிமன்ற வளாகத்திற்கு சிகரெட் பொதியில் மறைத்து கஞ்சாவை எடுத்துச் சென்ற விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனால், நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் திலின என்.பெரேஸ், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 7500 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த அஹங்கம விதானகே சந்தன (52) என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனமொன்றில் விவசாய ஆராய்ச்சி உதவி அதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.