22ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக சுதந்திரக்கட்சி அறிவிப்பு

Nila
2 years ago
22ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக சுதந்திரக்கட்சி அறிவிப்பு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று  இடம்பெற்ற 22வது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிப்பது அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக அல்ல என தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்தை பலப்படுத்தவே நாங்கள் 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம் என்று சிலர் கூறலாம். மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதாலேயே நாங்கள் திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம்.

அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது.

எனவே, உரம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!