யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணம் திருட்டு!

Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில்   கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணம் திருட்டு!

கல்வியங்காடு புதியசெம்மணி வீதி பகுதி கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது,

யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி பகுதியில் அமைந்துள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை திருட்டு இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்டுமான பொருட்கள் விற்பனை நிலைய திருட்டு தொடர்பாக மேலும் தெரியவருவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை கடையின் உரிமையாளர் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பூட்டி வீட்டுக்கு சென்றிருந்த தருணத்தில் திருடன் துவிச்சக்கர வண்டியில் வந்து விற்பனைநிலைய வாயிலை அவதானித்ததோடு, மாலை 6.00 மணிக்கு மர்மமான முறையில் உயர்ந்த பாதுகாப்பு மதில்கள் அமைக்கப்பட்ட விற்பனைநிலையத்தினுள் உள்நுழைந்து தனது கைவரிசையை காட்டி ரூபா 30.000 பணத்தை திருடிச்சென்றுள்ளான்.

திருடன் ஒருவன் விற்பனை நிலையத்தினுள் நுழைந்து ஆராய்வது அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

கட்டுமான பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில்,

நேற்றுமாலையே விற்பனை நிலைய சிசிடிவி கேமராக்களை அவதானித்ததாகவும், அதன் பின்பு பணத்தை பார்வையிட்டதாகவும்,
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!