ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி
Mayoorikka
2 years ago
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 10 மில்லியன் ரூபாய் வரையில் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.