அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு – கமல் குணரத்ன சந்திப்பு

Mayoorikka
2 years ago
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு – கமல் குணரத்ன சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு முன்னதாக ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!