இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு நாடாளுமன்றத்தின் கதவுகளை மூடுவதில் மிக்க மகிழ்ச்சி: வாசுதேவ
Prathees
2 years ago
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவருக்கு நாடாளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக வாசுதேவ நாணயக்கார நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இருபத்தி இரண்டாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி எமக்கு வாக்குறுதியளித்தார்.
ஆனால் அன்று அது நடக்காவிட்டாலும் இன்று நடந்ததில் மகிழ்ச்சி.
இப்போது இது நிறைவேற்றப்பட்ட பிறகு, இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவர் இந்த நாடாளுமன்றத்துக்கு வர முடியாது. அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.