அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்கள் ஸ்தாபிக்கப்படும்!
Mayoorikka
2 years ago
நாட்டின் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்களை ஸ்தாபிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்களை அமைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் அனைத்து சிறைச்சாலை நூலகங்களுக்கும் தேவையான புத்தகங்கள் கிடைத்துள்ளது.
மேலும் கைதிகளுக்கு மன்னிப்பு களை வழங்கும் போது புத்தகங்கள் வாசிப்பதையும் ஒரு தகுதியாகக் கருதும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.