ஆவா என அழைக்கப்படும் வினோதன் சுன்னாகம் காவல்துறையினரால் கைது
17 வயதுடையவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஆவா என அழைக்கப்படும் வினோதன் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றுக்கு சென்று திரும்பிய வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் வீதியில் சென்ற 17 வயதுடைய ஒருவரை வழிமறித்த நால்வர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பித்தனர்.
வாள்வெட்டுக்கு உள்ளானவர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
அவர்களில் ஆவா என அழைக்கப்படும் வினோதனும் வந்திருந்தார் என்று வாள்வெட்டுக்குள்ளானவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அதனடிப்படையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஆவா வினோதன் இன்று பிற்பகல் நீதிமன்றிலிருந்து வெளியேறிய நிலையில் கைது செய்யப்பட்டதுடன், வாள் ஒன்றும் அவரிடம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.