மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் : சுகாதார அமைச்சு

Mayoorikka
1 year ago
மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் : சுகாதார அமைச்சு

 மிகவும்  அத்தியாவசியமான 14 வகையான மருந்துப் பொருட்கள்  தற்போது கைவசம் இருக்கின்ற போதிலும், எதிர்வரும் காலத்துக்கான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அவற்றை கொள்வனவு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய அளவில் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படும் என சுகாதார அமைச்சின்  மருந்து விநியோக பிரதி பணிப்பாளர் நாயகமும் வைத்தியருமான டி.ஆர்.கே.ஹேரத் தெரிவித்துள்ளார். 

எந்த விதத்திலேனும் அத்தியாவசியமான 14 வகையான மருந்துப்  பொருட்களை  கொள்வனவு செய்தாக வேண்டும். இல்லையேல் நிலைமைகள் மோசமடையும். அதேபோல் இரண்டாம் கட்டத்தில் அவசியமான 380 மருந்துப் பொருட்களில் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆனால் தட்டுப்பாடு ஏற்படும் மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளை பரிந்துரைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், சேலைன்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது, ஆனால் தற்போது சேலைன்களை உள்நாட்டிலேயே  உற்பத்தி செய்கின்ற காரணத்தினால், நாட்டில்  சேலைன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இலங்கைக்கு தேவையான சேலைன்கள் இலங்கையிலேயே தாராளமாக கிடைக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.