உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 6 மனுக்கள்
Prathees
2 years ago
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் இதுவரை 6 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதாவது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் பல பிரஜைகளால் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
இம்மாதம் 21ஆம் திகதி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, ஒரு நபருக்கு வரி செலுத்தப்பட வேண்டிய மாத வருமான வரம்பு இரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இது கடுமையான பாரபட்சத்தை ஏற்படுத்தும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.