இஸ்லாமிய மசூதியில் இரு பிரிவினரிடையே மோதல்..! பலர் காயம்
Prathees
2 years ago
காலி கிந்தோட்டை அவுலியமலை பள்ளிவாசலில் இரண்டு முஸ்லிம் மத பிரிவுகளுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாரம்பரிய முஸ்லிம்கள் குழுவொன்று மத நிகழ்வு ஒன்றிற்கு சென்ற போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, எதிரணியினரின் தாக்குதல்களினால் குழுவினர் வந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் காலி பொலிஸார் நான்கு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.