20 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற மோசடி குறித்து விசாரணை
Prathees
2 years ago
கண்டி, மேபல் குரே மாவத்தையில் வசிக்கும் ஒருவரின் வாக்காளர் பட்டியலில் சுமார் 20 வருடங்களாக வீட்டில் வசிக்காத ஒருவரின் பெயர் மோசடியான முறையில் இடம்பெற்றுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட வாக்காளர் பட்டியலில் தனது வீட்டில் வசிக்காத ஒருவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் சுனில் ஹர்ஷதேவ ரணதுங்க கண்டி பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (26) முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வீட்டில் வசிக்காத ஒருவரின் பெயரை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் பொய்யாக சமர்ப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் தலைமையகத்தின் சிறு முறைப்பாடு பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.