தென்கொரிய தூதுவர் ஜியோங் வூன்ஜின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார்

Kanimoli
2 years ago
தென்கொரிய தூதுவர் ஜியோங் வூன்ஜின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார்

  இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வூன்ஜின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார்.

நாட்டின் தொழிலாளர்களுக்கான வருடாந்த ஒதுக்கீட்டை அதிகரித்துள்ள தென்கொரிய அரசாங்கத்திற்கு அமைச்சர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதன்போது உற்பத்தித் துறையில் 1,500 இட ஒதுக்கீட்டில் இருந்து 4,700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார்.

அதேவேளை கொரியாவில் வேலை வாய்ப்புக்கு தகுதி பெற்ற 5,800 பேர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு  ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!