முக்கியத்தர் ஒருவர் உலங்கு வானுார்தியில் அழைத்து வரப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Kanimoli
2 years ago
முக்கியத்தர் ஒருவர் உலங்கு வானுார்தியில் அழைத்து வரப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கடற்படையின் முன்னாள் தளபதி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இன்னும் அவர் யார் என்ற விடயம் வெளியாகவில்லை.
உலங்கு வானுார்தியில் அழைத்து வரப்பட்ட அவர், சாதாரண நடைமுறைகளுக்கு அப்பால், நேரடியாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தேசிய மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு மேலதிகமாக வெளியிட மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சையளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.