பிரியமாலியுடன் தொடர்புடைய கலைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் பொலிஸார்

Prasu
2 years ago
பிரியமாலியுடன் தொடர்புடைய  கலைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் பொலிஸார்

பலகோடி ரூபா மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது.

இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகைகள், அறிவிப்பாளர்கள் மற்றும் பேஷன் மாடல்களின் வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கலைஞர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வங்கிக் கணக்குகள் சோதனை செய்யப்படுகின்றன.

கடந்த 29ஆம் திகதி, நடிகை செமினி இட்டமல்கொடவிடம் 4 மணிநேர வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார், அவரது வங்கிக் கணக்குப் பதிவுகளைப் பெறுவதற்கும் ஏற்பாடு செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!