சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்
Kanimoli
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கான தயார்படுத்தலாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இடையில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள கலந்துரையாடலின் போது இலங்கைக்கான கடனை பெற்றுக்கொடுப்பது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.