கொழும்பு பொலிஸாரின் இரகசிய முடிவால் பிசுபிசுத்த தலைநகரின் போராட்டம்
கொழும்பு – மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று பகல் ஆரம்பமான நிலையில் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்த பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டபோராட்டம் பிசுபிசுத்துள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டப் பேரணி கோட்டை புகையிரத நிலையம் வரை செல்வதர்க்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட படையினர் வீதி முழுவதும் குவிக்கப்பட்டனர்.
கலைந்துசென்ற போராட்டகாரர்கள்
இதனால் பல மணி நேரமாக பொலிஸாரின் தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் செல்வதற்கு முயற்சித்தும் அது பயன் பற்று போனது. அதேசமயம் பொலிஸார் பொறுமையையும் கடைபிடித்து ,வன்முறைகளையும் பிரயோகிக்காமையால் தற்போது குறித்த இடத்தை விட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருக்கு ,போராட்டக்காரர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய போராட்டம் தொடர்பில் புலனாய்வு பிரிவினரால் பொலிசாருக்கு வழங்கப்பட்ட ரகசிய அறிவுறுத்தல்களால் பொலிஸார் போராட்டகாரர்கள்மீது எந்தவொரு அடாவடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடித்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.