வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் பாணில் கரிக்கட்டி சேர்த்து வேகவைக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் - மருதனார் மட சந்தியில் அமைந்துள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் பாணில் கரிக்கட்டி சேர்த்து வேகவைக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் காலை வேளை பாண் வாங்கியவர் வீடு சென்று அதனை வெட்ட முற்பட்ட நிலையில் பாணுடன் கரிக்கட்டி சேர்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பாணின் வெளிப்புறத்தில் குறித்த கரிக்கட்டி காணப்பட்டமயால் கண்டறியப்பட்ட நிலையில் உட்புறம் இருந்திருந்தால் உணவுடன் உற்சென்றிருக்கும்.
இவ்வாறே அச்சுவேலிப் பகுதியில் உள்ள வெதுப்பக நிலையத்தில் வாங்கிய பாணில் குண்டூசி இருந்தமை அண்மையில் கண்டறியப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்தார்களா அல்லது இலஞ்சம் வாங்கி நடவடிக்கையை தடுத்தார்களா என்பது ஆராயப்பட வேண்டும்.