அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு

Mayoorikka
2 years ago
அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தரவுக்கமைய, அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிளிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வைத்தியசாலைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் சகல சேவைகள், பணிகள் அல்லது தொழில் பங்களிப்பு என்பனவும் அத்தியாசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (3) முதல் அமுலாகும் வகையில் குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!