ஐந்து முட்டைகளை விற்ற வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!
Mayoorikka
2 years ago
ஐந்து முட்டைகளை விற்ற வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
ஐந்து முட்டைகளை கூடிய விலைக்கு விற்ற வீரகெட்டிய வர்த்தருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு முட்டை 60 ரூபாய் என்றடிப்படையில் ஐந்து முட்டைகளுக்கு 300 ரூபாய் அறவிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கே, இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.