எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்
Prabha Praneetha
2 years ago
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையான மின்வெட்டு விபரத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
மேற்குறித்த மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.