கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற வாய்த் தர்க்கத்தால் இருவரும் தற்கொலை

Kanimoli
2 years ago
கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற வாய்த் தர்க்கத்தால் இருவரும் தற்கொலை

மொனராகலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற வாய்த் தர்க்கத்தால் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மொனராகலை மாவட்டம் - படல்கும்புறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், மனைவி ஆத்திரமடைந்து, தனக்குத் தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

இதைக் கண்ட கணவன், இறப்பர் பால் வெட்டும் கத்தியை எடுத்து, தனது கழுத்தை தானே வெட்டிக் கொண்டார். தீ வைத்துக்கொண்ட மனைவி, நேற்றைய தினமே (03-11-2022) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி மரணமாகிய மறுதினம் கணவன் இன்று (04-11-2022) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

படல்கும்புறை இறப்பர் தோட்டத்தில் தொழிலாளர்களாக கடமையாற்றும் ஆர். எம். நந்தசேன என்ற 57 வயதுடைய கணவனும், அவரது மனைவியான 56 வயது நிரம்பிய ஆர். எம். மல்லிகா என்ற பெண்ணுமே உயிரிழந்துள்ளார்.

படல்கும்புறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!