யாழில் இது வரையில் டெங்கு நோயால் 2,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளது

Kanimoli
2 years ago
யாழில் இது வரையில் டெங்கு நோயால் 2,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளது

யாழில் இது வரையில் டெங்கு நோயால் 2,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனை யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதனை அவர் டெங்கு நோய் பரவல் தொடர்பான தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் அந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு இரண்டாயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 301பேராக குறைந்திருந்ததுடன் தற்போது மீண்டும் அதிகரிப்பை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!