இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு பற்றாக்குறை

Prathees
2 years ago
இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு பற்றாக்குறை

இறக்குமதி செய்யப்படும் உள்ளூர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆயுர்வேத மருந்துச் சீட்டுகளுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட 130 மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் வைத்தியர் பி.ஹேவாகமகே தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக போதியளவு மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமல் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக வைத்தியர் பி.ஹேவாகமகே தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் உள்ளூர் சிகிச்சையை நாடுகின்றனர்

ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உள்ளூர் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக ஆயுர்வேத வைத்தியசாலைகளும் பாதிப்படைவதாக அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பி ஹேவாகமகே மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!